Description
சீன பல்லவன் (பாகம் 1-2) (மொத்தம் 4 பாகங்கள்) – (வரலாற்று நாவல் )
இராஜசிம்மன் என்னும் பட்டப்பெயர் கொண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் – “சீனபல்லவன் ” என்று சிறப்பிக்கப்பட்டதன் காரணத்தை முன் வைத்து எழுந்ததே ‘சீனபல்லவன்’ எனும் இந்நாவல். இந்நாவலில் அரிய வரலாற்றுச் செய்திகளும், ஆன்மீகச் செய்திகளும், கட்டடக்கலைச் சிறப்புகளும் நிறைந்துள்ளன. தன் முன்னோர் மகாபலிபுரத்தில் அமைத்த குடவரைக் கோயில்களையும், புடைப்புச் சிற்பங்களையும் தாண்டி, இராஜசிம்மன் செய்த கற்றளியின் நுணுக்கங்களை, சிறப்புகளை இந்நாவலின் வழி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முனைந்துள்ளேன்.
பல்லவப் பேரரசரான ராஜசிம்மர் அராபியர்களையும் திபெத்தியர்களையும் வெற்றி கொண்டது பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
பேரரசர் ராஜசிம்மர் கோயில் கலைக்கு மட்டும் முன்னோடியல்ல. பல விசயங்களிலும் முன்னோடியாக இருந்திருக்கிறார். அவரது உதவியை சீனப் பேரரசர் நாடினார் என்பதும் அவருக்குக் கௌரவப் பட்டயம் அளிக்கப்பட்டது என்பதும், தென்னிந்தியாவின் பேரரசர் எனப் பாராட்டப்பட்டார் என்றும் அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.
இந்த நாவலைப் படிப்பதன் மூலம் பேரரசர் இராஜசிம்மப் பல்லவரின் மகத்துவம் உணரப் பெற்றால் அதுதான் நாவலின் வெற்றி.