Description
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி , அபுல்காசிம் ஆகியோரின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்ற சொற்றொடர் விளக்கும்.
இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார்.
Reviews
There are no reviews yet.