Description
இந்நூலில் கூறப்பெற்ற வேந்தர்களில் மனு,சுகுந்தன், சிபி, காந்தன்,தொடித்தோட் செம்பியன் என்போர் கால வரையறைக்கு உட்படாதோராவர். அவருள்ளும் முசுகுந்தனானவன் சரித்திரக்காரர்க்கு முற்றிலும் புறம்பான பழம்பிறப்பு, வானவர், அவுணர் என்னும் செய்திகளுடன் தொடர்புடையனாகின்றான்.
எனினும், அன்னோர் சோழகுல முன்னோராகக் கொள்ளப்பெற்று அவர் வரலாறுகள் நல்லிசைப்புலவரின் செய்யுட்களிற் பயின்றிருத்தலானும், பல நற்பொருளை அறிவுறுத்துவன ஆகலானும் இந்நூலிற் கூறப்படுதற்கு அவர்கள் முற்றிலும் உரிமையுடையராவர்.
Reviews
There are no reviews yet.