Description
“சோழேந்திர சிம்மன்” இராஜேந்திர சோழன் (வரலாற்று நாவல்)
உளிமகிழ் ராஜ்கமல் அவர்கள் பல வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சோழச் சுவடுகள்…. பெருவுடையார், ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர், மேற்கே ஓர் சூரியன், சிநேக நந்தி, தமிழுமானவன், சோழ வானவில் – அதிராஜேந்திர சோழர் இந்த வரலாற்று நூல் வரிசையில் தற்பொழுது….
அலைகடல் மேலே பல கலம் செலுத்தி, தென்கிழக்காசிய நாடுகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சிபுரிந்த முதலாம் இராஜேந்திர சோழன் பெற்ற ஓர் மாபெரும் வெற்றியினைக் கொண்டாடும் புதினம் இது.
சோழ தேசத்தின் வெற்றி வரலாற்றில் ஓர் பெரும் களங்கமாக இருந்த இதனை, கி.பி. 1017 – ல், தனது படைகளோடு சென்று, பாண்டியரின் அரசுரிமைச் சின்னங்களை மீட்டுவருகிரன் இராஜேந்திர சோழன்.
இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வினை, அடிப்படையாகக் கொண்டு, இப்படி நடந்திருக்கலாம்… இவையெல்லாம் காரணிகளாக இருந்திருக்கலாம் என்ற சரித்திரம் மாற்றாத கற்பனையின் அடிப்படையில் உருவானதே இப்புதினம்.