Description
சோழ வானவில் அதிராஜேந்திர சோழர் (வரலாற்று நாவல் )
பிற்காலச் சோழர் வரலாற்றில், முதலாம் ராஜேந்திரரின் கடைசி மைந்தரான வீரராஜேந்திரருக்குப் பிறகு, அவரது மைந்தரான அதிராஜேந்திரரோடு, சோழவம்சத்தின் நேரடி ஆட்சி முடிவிற்கு வருகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி அரசராகப் பதவியேற்ற சில திங்கள்களுக்குள்ளேயே, அதிராஜேந்திரர் மரணமடைந்தது, ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது இன்றுவரை.
அதேபோல், நேரடி வாரிசுகளான அதிராஜேந்திரரின் தம்பி, மற்றும் இரண்டாம் இராஜேந்திரரின் மகன்கள், பெயரன்கள் என எத்தனையோபேர் இருக்க, இராஜேந்திரரின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கனிடம் சோழ ஆட்சி எப்படி ஒப்படைக்கப்பட்டது என்பதும் இன்றுவரை வரையறுக்க முடியாததாகவே இருக்கிறது.
இந்த இரண்டு விசயங்களும் இப்படி நடந்திருக்கலாம் என எனக்கு தோன்றிய வகையில், விடைகாண முற்பட்டதே, இந்த ” சோழ வானவில் ” புதினம்.