Description
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்பவற்றுள் அணி இலக்கணம் பற்றி தனித்து விரிவாகக் கூறும் நூல் தண்டியலங்காரம். அணி என்பதற்கு அழகு என்று பொருள். ஒரு படைப்பு செறிவான கருத்தினை மட்டும் கொண்டிருந்தால் போதாது. அது மக்கள் அனைவருக்கும் சென்று சேர அழகுற எடுத்துரைத்திருக்க வேண்டும். இதற்கு வழிகாட்டுவதே அணி இலக்கணம். அனைத்து மொழிகளில் உள்ள நூல்களுக்கும் பொதுவானது.இத்தகு சிறப்புடைய அணி இலக்கணத்தை பொதுவியல், பொருள் அணியியல், சொல்லணி இயல் என்று மூன்று பிரிவுகளில் இந்நூல் விளக்கி உரைக்கிறது.
Reviews
There are no reviews yet.