Description
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமந்திரம் பாயிரமும் அதனை அடுத்து ஒன்பது உட்பிரிவுகளும் கொண்டது. கலிவிருத்தம் என்னும் யாப்பில் அமைந்த பாடல்களால் நூல் அமைந்துள்ளது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் 9 தலைப்புகளில் பாடல்களும் உள்ளன.
Reviews
There are no reviews yet.