Description
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவது மைசூர்
போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பல உணர்வுகளை எழுப்பக்கூடியவராக இருக்கிறார்.
திப்பு சுல்தான் இறந்த பிறகு அவரது கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்த பொன், பொருள், ஆயுதங்கள், கலைப் பொருட்கள், ஆடை, அணிகலன்கள் அனைத்தும் இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இப்பொருள்களில் சிலவற்றை இலண்டன் அருங்காட்சியகங்களில் வைத்துள்ளனர். சில அவ்வப்பொழுது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் திப்புவின் நூலகமும் ஒன்று. இந்நூலகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட
நூல்கள் குறித்தும், அவற்றுள் திப்புசுல்தான் கனவுகளைப் பற்றி எழுதிய நூல் குறித்தும், அவரது கனவுகள் பற்றியும் எடுத்துரைப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.