Description
உலகப் புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுவது திருக்குறள் ஆகும். இந்நூல் முதன்முதலாக 1812இல் தஞ்சை ஞானப்பிரகாசரால் வெளியிடப் பெற்றது. அன்று முதல் இன்றுவரை எண்ணிலடங்கா பல பதிப்புகளைப் பெற்றுச் சிறந்து விளங்கும் திருக்குறள் பல்வேறு சிறப்புகளை உடையது. அவற்றுள் ஒன்று, ‘உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது’ என்பதாகும். ‘உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்’ என்னும் பெயரில் ஒரு நூலே வெளிவரும் அளவிற்குப் புகழுடைய நூல்
திருக்குறளாகும். இந்நூலை முழுமையாக முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தவர் ஜி.யு. போப் ஆவார். 1886இல் இம்மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது. இத்தகைய சிறப்புடைய இந்நூல், இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. அந்தவகையில் தற்போது எமது பதிப்பகம் வழியாக ஜி.யு. போப் அவர்களது ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறளே இந்நூல்.







Reviews
There are no reviews yet.