Description
சில வரையறுத்த வரைவுகளோடு திருக்குறளுக்கு ஒருவரி உரை காண வேண்டும் என்னும் நோக்கில், வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்குகளில், ஆய்வரங்குகளுக்கிடையே, திருக்குறள் ஒருவரி உரை – தொடர் பயிற்சி அரங்குகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சி அரங்குகளில் பேராசிரியர் திருக்குறள் வெ. அரங்கராசன், முனைவர் திருக்குறள் நயம்பு அறிவுடை நம்பி, அருள்திரு திருக்குறள் தூதர் இல. ச. சதாசிவம், அருள்திரு திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன், திருக்குறள் இராம். மோகன்தாசு, புலவர் தி. வெ. விஜயலட்சுமி, அருள்திரு திருக்குறள் தூதர் மு. வேங்கடேசன் திருக்குறள் ஒருவரி உரைகள் வழங்கி வந்தனர். அவர்களுள் ஒருவர்தான் கவிமாமணி திருக்குறள் குமரிச்செழியன் அவர்கள். அப்பயிற்சி அரங்குகளின் ஒருவரி உரைகள் வழங்கியதன் விளைவுதான் ‘திருக்குறள் – மூலமும் உரையும்’ என்னும் இந்த ஒருவரி உரை நூல்.






Reviews
There are no reviews yet.