Description
திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை. திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் வைப்புமுறையில் பரிமேலழகர் குறட்பாக்களை ஒவ்வொரு அதிகாரத்திலும் அடுக்கி வைத்துள்ள முறைமையே இன்று அனைவராலும் பின்பற்றப்படுகிறது.
திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. அந்தப் பத்து உரைகளில் காலத்தால் முற்பட்டது மணக்குடவர் உரை என்றும் அது 10ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது என்றும் அறிஞர் கூறுவர். திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் உரை வழியாகவே.
பரிமேலழகரின் உரை மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழிந்தே எழுதப்பட்டது. ஆயினும் மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.
பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:
- பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது.
- பரிமேலழகர் உரை சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது.
- பரிமேலழகர் உரையில் அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.







Reviews
There are no reviews yet.