Description
இறைவனைப் போற்றி வாழ்த்தும் நூல்களில் பக்தனது ஆன்மீக அனுபவத்தைச் சொற்களால் பிழிந்தெடுத்துக் கூறுபவை
உலகில் மிகச்சில நூல்களே. அவற்றுள் ஒன்றாகச் சிறப்பு பெற்றது மாணிக்கவாசகர் எழுதிய இத் திருவாசகம். சிவபெருமானைப் பற்றிப் பலவகையிலும் உள்ளம் உருகப் பாடியுள்ள மாணிக்க வாசகரின் மொழி மிக எளிமையானது. நேர்த்தியானது. பாடல்களைப் பதம் பிரித்துப் படித்தாலே பாதி புரிந்துவிடும். பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இருந்தால்
மீதியும் புரிந்துவிடும்.
இந்நூல் `நமச்சிவாய’ எனும் ஐந்தெழுத்தில் தொடங்கும் பெருமை உடையது. `ஐம்பத்தொரு திருப்பதிகங்களும் 658
பாடல்களும்’ இந்நூலில் அமைந்துள்ளன. திருவாசகம் வேறு சிவன் வேறு என்று எண்ணப்படாமல் சைவர்கள் பலரால் திருவாசக ஏடு பூசையில் வணங்கப்படும் பெருமையினை உடையது. இப்பாடல்கள் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் தன்மை கொண்டவை. “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று கூறுவர். இப்பாடல்கள் தமிழரை மட்டுமன்றி மேல்நாட்டவரையும் உள்ளம் உருகச் செய்துள்ளது.








Reviews
There are no reviews yet.