Description
திருக்களிற்றுப்படியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுட் தலை சிறந்ததான சிவஞான போதத்துக்கு முற்பட்ட இந்த நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் நூறு வெண்பாக்களால் ஆனது.இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உண்டு.
இந்நூலாசிரியர் தாழ்ந்த இனத்தவராதலால் முதலில் இவர் செய்த நூல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆசிரியர் திருவருளை வேண்டி, தன் நூலைத் தில்லை நடராசப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பஞ்சாக்கரப் படியில் (திருக்களிற்றுப்படி) வைக்க, படியின் இரு பக்கமுள்ள கல்யானைகள் உயிர் பெற்றுத் தம் தும்பிக்கையால் அந்நூலை எடுத்து நடராசப் பெருமானின் திருவடியில் வைக்க, அந்நூலின் சிறப்பை உணர்ந்த அடியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அதனாலேயே, அந்நூல் அப்பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வழங்கும் செய்தியாகும்.
Reviews
There are no reviews yet.