Description
சிற்றிலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க சிறப்புடையது கலம்பக இலக்கியம். அகமும் புறமும் இயைந்துவரப் பதினெட்டு உறுப்புகளால் யாக்கப்படுவது இவ்விலக்கியம். கலம்பக இலக்கியங்களுள் புகழ் வாய்ந்ததாகவும்
முதலாவதுமான நந்திக் கலம்பகம் நந்திவர்மனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. நந்திவர்மன் அறம்
வைத்துப் பாடி எரிக்கப்பட்டான் என்பது இலக்கியத்தின் மறைபொருளாகும். நந்திவர்மனின் நான்கு தம்பியர்களின்
ஒட்டுமொத்தச் சூழ்ச்சியினால் நந்திவர்மன் இறந்தான் என்னும் செய்தியே நந்திக்கலம்பக இலக்கியத்தை ஆழமாகக்
கற்கிறபோது உணரக் கிடக்கிறது. நந்திவர்மனைப் புகழ்ச்சிக்கு உரியவனாக்கி அப்புகழ்ச்சிச் சொற்களுக்குள்
கவர்படுபொருளாய்த் தீய சொற்களைப் பொதிந்து ஆசிரியன் இலக்கியத்தைப் படைத்திருக்கிறான். திறனாய்வு
நோக்கில் நந்திக் கலம்பகம் என்னும் இந்நூலில் கலம்பக இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாடாண்திணைப்
பாடல்களில் நந்திவர்மனின் சிறப்புகள், நந்திக் கலம்பகத்தில் கலம்பக உறுப்புகள், நந்திக்கலம்பகத்தில் திணைகளும்
துறைகளும், வசையும் மந்திரமும் சூழ்ச்சியும் இணைய எரிந்தான் நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் பாகுபடுத்தப்பட்டு நந்திக்கலம்பக இலக்கியம் விரிவான களத்தில் ஆராயப்படுகிறது.







Reviews
There are no reviews yet.