Description
தென்பாண்டிச் செல்வன் (பாகம் 1 – 2) – (வரலாற்று நாவல்)
தென்காசிப் பாண்டியர்கள் வம்சத்தை தொடங்கி வைத்தவன் பராக்கிரம பாண்டியன். முகலாயர் படையெடுப்பினால் வஞ்சகமாக துறத்தப்பட்ட பராக்கிரம பாண்டியன் தெற்கே தென்காசியை தனது நான்கு தம்பிகளுடன் அடைந்து புதிய தலைநகரம் அமைத்து முடிசூடினான்.
வடக்கே காசி நகர் முகமதிய தளபதிகளால் சூறையாடப்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலும் பல இடிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. பராக்கிரம பாண்டியனின் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொன்னதும் , அதனை சிரம் மேற்கொண்டு கட்டப்பட்டதே இன்றைய தென்காசி விஸ்வநாதர் ஆலயம். கலையழகுடன் காண்போர் வியக்கும் இவ்வாலயம் கட்டப்பட்ட முறையையும், பராக்கிரம பாண்டியனின் செங்கோலாட்சியையும் ‘தென்பாண்டிச் செல்வன்’ என்ற வரலாற்று புதினமாக்கியுள்ளார்.