Description
உரையாசிரியர்களில் காலத்தால் முந்தியவர் இளம்பூரணர். இவரை உரையாசிரியர் என்ற பெயரிலும் அழைப்பர். இளம்பூரணர் காலம் கி.பி.1070 முதல் கி.பி.1095 வரை இருக்கலாம் என்பார் மு.அருணாசலம். இளம்பூரணர், பொதுவான ஒரு நெறியை உரை முழுவதும் மேற்கொண்டுள்ளார் என்று கூறலாம். அதிகார விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள், தெளிவுரை, சொற்றொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும்.
பெயர் சுட்டாது உரை கூறுதல், அடக்கமாக உரை சொல்லுதல், ஒன்றிற்கு ஒன்று தொடர்பு காணல், நினைவு கூர்தல், பின்நோக்கிப் பார்த்து உரை கூறல், பொருத்திக் காட்டுதல், தாமே வினா எழுப்பி விடை காணுதல் என்பன இளம்பூரணரின் உரைநடைத் தன்மையாகச் சா.கிருட்டிணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘தொல்காப்பியம் இளம்பூரணர் உரைத்திறம்’ என்ற இந்தப் புத்தகத்தில் முனைவர் திருமதி.தாமரை அவர்கள் ஆய்வறிஞர்கள் இதுவரை சுட்டிக்காட்டாத இளம்பூரணரின் உரையில் வெளிப்பட்டுள்ள எண்ணற்ற புதுமைகளையும் அவரின் அறிவு பூரணமாக வெளிப்படும் இடங்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
Reviews
There are no reviews yet.