Description
தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkappiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃதுஇலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
சேனாவரையர் (Senavaraiyar) தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இடைக்காலத் தமிழ் மொழி உரையாசிரியர்களில் ஒருவர். சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும். எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும்.
இவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது.








Reviews
There are no reviews yet.