Description
காந்தளூர் சாலைப் போர் சோழப் பேரரசர்களுக்கும் பிற்கால சேரர்களின் அரசின் படைகளுக்கும் இடையே தற்போதைய கேரளா அரசின் விழிஞம் எனுமிடத்திற்கு அருகிலுள்ள துறைமுகப் பட்டணமான காந்தளூர் சாலையில் (தற்போது வலியசாலா[1]) கிட்டத்தட்ட கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இடம்பெற்றன. முதலாம் போரில் முதலாம் இராசராசனும், இரண்டாம் போரில் முதலாம் இராசேந்திரன் சோழ வேந்தர்களாய் போருக்கு தலைமை தாங்கி சேர வேந்தர்களை வென்றனர்.
“சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது.
முதலாம் இராசாதிராசனின் இரண்டு மெய்கீர்த்திகளிலுமே அவன் காந்தளூர் சாலையை வென்ற நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.