Description
செம்பியன் கண்டியூரில் ஜீவானந்தம் என்பவருக்குச் சொந்தமான வயலில், கிடைத்த, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்கலங்கள்.
செம்பியன் கண்டியூரில் தொல்லியல் துறையும் அகழாய்வுகள் மேற்கொண்டது. அதில், இரும்பு காலத்தை சேர்ந்த மட்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டது..
திருவள்ளூர் அருகே உள்ளது பட்டரை பெரும்புதூர் கிராமம். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இருந்தே பெருமூர், சிம்மலாந்தக சதுர்வேதி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் பட்டரை பெரும்புதூர் அழைக்கப்பட்டு வந்துள்ளது
வரலாற்றுத் தொடக்க காலத்தை பதிவுசெய்யும் தமிழ் பிராமி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், ரோமானியர்கள் வருகை யைப் பறைசாற்றும் ரவுலட்டட் மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள், துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக அதிக எண்ணிக்கையிலான உறை களை கொண்ட உறை கிணறு ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும், 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும் பழங்கற்காலத்தின் கடைக் காலம் மற்றும் இடைக் கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகிய காலங்களைச் சேர்ந்தவை யாகும்.
இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் யாவும், பட்டரைபெரும் புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Reviews
There are no reviews yet.