Description
தமிழ் இலக்கியங்களில் `நந்திக் கலம்பகம்’ ஒரு இலக்கிய நூலாக மட்டுமன்றிச் சிறந்த வரலாற்று நூலாகவும் விளங்கும் பெருமை உடையது. பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனைச் சிறப்பித்து எழுதப்பெற்றது. ஒவ்வொரு பாட்டிலும் நந்திவர்மனின் புகழ் கூறப்படுகிறது. இவனது குணங்கள், வெற்றிகள், பட்டப்பெயர்கள் யாவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த சொற்சுவை, பொருட்சுவையோடு விளங்கும் இந்நூலின் ஆசிரியர் பெயர்
தெரியவில்லை.
தந்தை இறந்த உடன் நந்திவர்மன் அரசு ஏற்றிருக்கிறான். ஆனால், இவன் தந்தையின் பிற மனைவியர்க்குப் பிறந்த நால்வர் தாங்களே அரசனாக வேண்டும் என்ற எண்ணத்தில், சேர-சோழ-பாண்டியருடன் இணைந்து தெள்ளாறு எனும் இடத்தில் இவனுடன் கடுமையான போர் புரிந்தனர். போரில் நந்தவர்மனே வெற்றி பெறுகிறான். இதனால் அவன் தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் எனும் பட்டப்பெயரை அடைகிறான். இப்போர் குறித்து இந்நூல் கூறுகிறது. இப்போரை
அடுத்து கடம்பூர், பழையாறை இடங்களில் நடந்த போரிலும் இவனே வெற்றி பெறுகிறான். இதனால் நந்திவர்மனைச் சூழ்ச்சியால் கொல்ல இந்நூலை அவனின் சகோதரர்களுள் ஒருவன் பாடியது என்பர். சூழ்ச்சி நிறைந்த இப்பாடல்களைக் கேட்டுவிட்டு நந்திவர்மனும் இறந்து போனான். அகப்பாடல்களாலும், புறப்பாடல்களாலும் நந்தியின் புகழைச் சுவைப்பட அமைத்துள்ளது இந்நூல். முதல் கலம்பக நூல் எனும் பெருமையுடையது.








Reviews
There are no reviews yet.