Description
நன்னூல், தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நன்னூல் 12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும் ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும் எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
எழுத்ததிகாரத்தில், எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துகள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துகள் மொழிமுதலாக வரா எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை மாற்றி வரும் எனக் காட்டுகிறார்.








Reviews
There are no reviews yet.