Description
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் வைக்கும் முறையைப் பற்றி பேசுவது பாயிராமாகும். பாயிரத்திற்குரிய ஏழு பெயர்கள்:
- முகவுரை-நூலுக்கு முன் சொல்லப்படுவது.
- பதிகம்-ஐந்து பொதுவாகவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருட்களையும் தொகுத்து சொல்வது.
- அணிந்துரை
- புனைந்துரை – நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரிக்கும் சொல்வது.
- நூன்முகம்-நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
- புறவுரை-நூலில் சொல்லியப் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
- தந்துரை- நூலில் சொல்லியும் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே தந்து சொல்வது.
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்ய வேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.
- எழுத்து
- எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துகள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துகள் மொழிமுதலாக வரா எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை மாற்றி வரும் எனக் காட்டுகிறார்.
- சொல்
- தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
- தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.








Reviews
There are no reviews yet.