Description
வாழ்க்கைக்குத் தேவையான நல்ல நெறிகளைத் தொகுத்து உரைத்துள்ள ஒரு நீதி நூல் நன்னெறியாகும். இந்நூலை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பாடுவதில் வல்லவரான இவர் முப்பத்திரண்டு ஆண்டுகாலம் மட்டுமே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்னெறி நாற்பது பாடல்களை உடையது.
இத்துடன் கடவுள் வாழ்த்துப் பாடலாக விநாயகரை வேண்டித் துவங்கும் பாடல் ஒன்றும் உள்ளது. இந்நூலின் பாடல்கள் அனைத்தும் பெண் ஒருத்தியை அழைத்துச் சொல்வன போன்று அமைந்துள்ளன. மூதுரை, நல்வழி போன்று இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு நற்கருத்தை ஏற்ற உவமையுடன் அழகுற விளக்கியுள்ளது. நாற்பது வெண்பாக்கள், நாற்பது உவமைகள், நாற்பது கருத்துகள் என்ற நிலையில் படைக்கப்பட்டது நன்னெறியாகும்.








Reviews
There are no reviews yet.