Description

உலகத்தின் இயக்கத்தை மாற்றிய கொரோனாவினால் என் தினசரி இயக்கமும் மாறவே செய்தது. எனக்கென கிடைத்து வந்த சில மணி நேரமும் இல்லாமல் போக என்ன செய்வதென திகைத்து பின் தெளிந்து. காலத்துடன் போர் புரிந்து எழுதப்பட்ட புதினம் நயனவல்லியின் காதல். விக்கிரம சோழர் மற்றும் இரண்டாம் குலோத்துங்கர் ஆட்சியை மையப்படுத்தி. அதில் எனது முதல் புதினமான எழிலி பெற்ற அதே நற்பெயரை தனக்கும் வாசகர்களாகிய நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கைகளில் தவழ வந்துள்ளாள் நயனவல்லி.