Description
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நான்மணிக்கடிகையும் ஒன்று. நான்மணிக் கடிகையை விளம்பிநாகனார்
இயற்றியளித்துள்ளார். விளம்பி என்னும் ஊரிற் பிறந்தவராக இருக்கலாம். அதனால், விளம்பிநாகனார் என்று அவர் வழங்கப் பெறலானார். இவரது காலம் கி.பி. இருநூறுக்கும் முற்பட்டதெனக் கருதுகின்றனர் வரலாற்று ஆசிரியர். நான்மணிக்கடிகை என்னும் இந்நூல், நந்நான்கு வகையான நீதி மணிகளாற் கோக்கப்பெற்ற ஒருவகை அணிகலன் போன்றது என்பதாகும். கடவுள் வாழ்த்துடன் நூற்று ஆறு வெண்பாக்களால் ஆக்கப் பெற்றுள்ளது நான்மணிக்கடிகை. அறநூல்களின் வரிசையில் அழகு பெற்றிலங்குவது நான்மணிக் கடிகை. இவ்வுரை பழைய உரையைத் தழுவி ஆசிரியர் குழுவால் செம்மைப் படுத்தப்பட்டுள்ளது







Reviews
There are no reviews yet.