Description
மக்களின் நல்வாழ்க்ககைக்குத் தேவையான அறக்கோட்ப்பாடுகளை எடுத்துரைக்கும் சங்கம் மருவியகால இலக்கியங்களின் தொடர்ச்சியாய்ப் பிற்க்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாய்த் திகழ்பவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் இலக்கியங்களாகும். இவற்றுள் ஔவையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்னும் நான்கு இலக்கியங்களைப் படைத்துள்ளார். உலக நீதி உலகநாதரால் படைக்கப்பட்டது. வெற்றிவேற்கை, நன்னெறி என்னும் இலக்கியங்களை முறையே அதிவீரராம பாண்டியனும் சிவப்பிரகாச சுவாமிகளும் படைத்தளித் திருக்கின்றனர். சங்கம் மருவிய கால இலக்கியங்களில் கூறப்பட்ட அறங்களே பிற்ககால நீதி நூல்களிலும் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும்
பிற்கால நீதிநூல்கள் அறம் கூறும் முறையினாலும் சிறந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் என்னும் நிலையில் கற்பனைக் கலப்பின்றி வாழ்வியல் உண்மைகளை உள்ளது உள்ளவாறே கூறுவதில் இவ்விலக்கியங்கள் தெளிவான நோக்கினைக் கொண்டிருக்கின்றன.







Reviews
There are no reviews yet.