Description
தமிழ் மொழி தொன்மையான இலக்கிய இலக்கண வளங்களை உடையது. அவற்றுள் நீதி இலக்கியங்களும் அடங்கும். திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் உருவான சங்க இலக்கிய காலத்தை அடுத்து, அவ்வையாரின் ஆத்திச்சூடி உருவான காலத்தில், பிற்கால நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. அவ்வாறு உருவான நீதி நூல்களில், சிறப்புமிக்க அற நூலாகக் கருதப்படுவது “நீதி வெண்பா”. இந்நூலை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்ட நூல் இது. இந் நூலின் ஆசிரியர் சிறந்த சிவபக்தராக இருந்திருக்க வேண்டும். “சிவபெருமானை நம்பியவர்கள் கைவிடப்படுவதில்லை. சிவன் அடியார்களின் பொருளை அபகரித்தால் துன்பம் வந்து சேரும். “என்பன போன்ற கருத்துகள் இந்நூலில் சொல்லப்படுவதிலிருந்து இதனை நாம் உணர முடிகிறது.






Reviews
There are no reviews yet.