Description
“பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே” என்று பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பெண்களுக்குக் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த வரிசையில் `படித்த பெண்கள்’ எனும் இந்த உரைநடை நாடகநூலும், பெண் கல்வியை
வலியுறுத்துவதாக அமைகிறது. ஒருவன் பெரும் செல்வம் பெற்றவனாக இருந்தாலும், ஒழுக்கமும், கல்வியும் இல்லாது தீயவழியில் சென்றால், அவன் செல்வம் நிலைத்திருக்காது. இந்நாடகத்தில் இன்னமுது, அவளின் அக்கா மின்னொளி என்னும் இரு பெண்களைப் படித்த பெண்களாகப் படைத்து, அவர்களால் குடும்பத்திற்கு உண்டான நன்மையைக் காட்டும் வகையில் அமைத்துள்ளார். மின்னொளி தன் கடையில் நடந்த திருட்டைக் கண்டறிந்து கணவனிடம் கூறும் விதம் அறிவார்ந்தது. இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். குடும்பத்தை நடத்துவதில் இருவருக்கும் சமபங்கு வேண்டும். பெண் கல்வி பெற்றால் குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் நலம் பெறும் என்பதை இந்நாடகத்தின் வழி வலியுறுத்துகிறார்








Reviews
There are no reviews yet.