Description
செம்மொழி எனும் சிறப்பிற்குரிய தமிழ்மொழியின் செவ்விலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று பட்டினப்பாலை. கரிகாலன் ஆட்சி புரிந்த காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறும் இந்நூலை, மறைமலை அடிகளார் பன்னிரு தலைப்புகளில் ஆய்ந்து விவரிக்கிறது இந்நூல்.
பட்டினப்பாலையை ஆக்கிய உருத்திரங்கண்ணனாரது வரலாறு, பாட்டுரைத் தலைவனான கரிகாலனின் வரலாறு, பாடல்களின் இயல்பு, பாட்டிலுள்ள பொருட் பாகுபாடு, பாட்டின் நலன், பாட்டின் நடை என ஒவ்வொரு தலைப்பும் ஆழ்ந்து விளக்கப்பட்டுள்ளது. பாலை என்னும் மக்களது அக ஒழுக்கம் பற்றிக் கூறும் இப்பாட்டில் அவரது புற ஒழுக்கமும் கூற வேண்டுமெனில் `வாகை’ பற்றியும் கூறவேண்டும் என்று கூறி விளக்கும் ஆசிரியர் இப்பாட்டு உருவாவதற்கான வரலாற்றையும் கூறியுள்ளார். இவ்வாறு பட்டினப்பாலை பற்றிய ஒரு முழுமையான ஆய்வு நூலாக இது விளங்குகிறது.







Reviews
There are no reviews yet.