Description
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்களின் இடம் பற்றி முதலில் விளக்கிவிட்டு, அந்தப் பாடல்களின் திறத்தினைத் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியும் ஆய்வறிஞருமான மறைமலை அடிகள் அவர்களின் கூற்றின் வாயிலாக நமக்குப் புலப்படுத்துகிறார். முல்லைப்பாட்டில் பதிவாகியுள்ள இயற்கை சார்ந்த கூறுகளை விளக்கி, அந்தப் பாட்டின் திறத்தினை நமக்குத் தெரிவிக்கின்றார்.நப்பூதனாரின் வரிகளுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம் தருகிறார். மொத்தப் பாடலுக்கும் பொருளுரையும் நல்கியுள்ளார். தமிழ் இலக்கியம் பயிலும் மாணாக்கருக்கு மட்டுமின்றி, தமிழார்வலர்களுக்கும் புரியும் வகையிலும் அவர்களின் மனத்தை ஈர்க்கும் விதத்திலும் முல்லைப்பாட்டினைப் புதிய முறையில் விளக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.