Description
பராந்தகன் கனவு (வரலாற்று நாவல்)
சோழன் திருமாவளவனுக்குப் பிறகு சோழ நாடு சிதறுண்டது. களப்பிரர்களும் பல்லவர்களும் சோழ நாட்டைச் சுமார் அறுநூறு ஆண்டுகள் ஆண்டார்கள். அவர்களிடமிருந்து சோழ நாடு மீண்டபோது அதைச் சாம்ராஜ்யமாக ஆக்க வித்திட்டான் விஜயாலய சோழன். அந்த வித்தை விருட்சமாக்கினான் அவனது மகன் ஆதித்த சோழன். அந்த விருட்சத்தை தோப்பாக உயர்த்தியவன் அவனது மகன் பராந்தகன்.
பராந்தகன் என்றச் சொல்லுக்கு பரந்துபட்ட எதிரிகளை அழித்தவன் என்று பொருள் கூறுவார். சிறப்புக்குரிய பெயரை இம்மன்னன் இயற்பெயராகவே கொண்டிருந்தான்.
இவனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவனது ஆட்சியில் இரண்டு சிறப்பான நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை சம்மந்தப்பட்டது ஒன்று. ராஷ்டிரக்கூடர்கள் சம்மந்தப்பட்டது மற்றொன்று. அது குறித்து அவன் கனவு கண்டதாக வரலாறு சொல்லவில்லை. நான் சொல்கிறேன். பராந்தகனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதையே இந்நாவல் விரிவாகக் கூறுகிறது.
Reviews
There are no reviews yet.