Description
பல்லவ முரசு (வரலாற்று நாவல்)
பல்லவ மன்னர்களில் தலைசிறந்தவர்களாக எண்ணப்படுவோர் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன், நந்திவர்மன் ஆகியோரே.
நந்திவர்மன் தனது 12 ம் வயதிலேயே பல்லவ அரியணையை அலங்கரித்தான் என்பர். காசக்குடி செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வெளியான பல புதிய செய்திகள் மூலம் பல்லவ மன்னர்களைப் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது.
பல்லவ வரலாற்றில் நந்திவர்மன் காஞ்சியில் இல்லாதபோது சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்றும் பின்னர் திரும்பிவந்த நந்திவர்மன் காஞ்சியை மீண்டும் கைப்பற்றினான் என்றும் கூறுவர். இவ்விரு மன்னர்களுக்கும் இடையேயான இடைவெளியை இட்டு நிரப்பும் முறையில் இந்நாவல் அமைந்துள்ளது.
சாளுக்கிய நாட்டிற்கும் பல்லவ நாட்டிற்கும் இடையே நடைபெறும் சண்டையையே அடிப்படையாகக் கொண்டு இந்நாவல் நடக்கிறது. நிறைவில் நந்திவர்மனும் சாளுக்கிய இளவரசி ரேவா தேவியும் இணைகின்றனர்.