Description
“பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவற்றாதீர்” என்றார் பாரதி. இப்பாரத தேசத்தில் தலைசிறந்த இதிகாசங்களாகப் போற்றப்படுபவை இராமயாயணமும் மகாபாரதமும். மகாபாரதத்தின் உயிர்நாடியாக விளங்குபவள் பாஞ்சாலி, இவளுக்கு ஏற்பட்ட துன்பம்தான் இவளை மகாபாரத காப்பியத்தின் உயிர் நாடியாக ஆக்கியது. இந்த வியாச
முனிவரது மகாபாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலி சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்துள்ள நூலே இது. வியாசர் மட்டுமல்லாது தமிழில் வில்லிப்புத்தூராரும் இப்பாரதத்தை எழுதியுள்ளார். இதில் சூதுபோர்ச்சருக்கம் மட்டுமே பாரதியால் பாஞ்சாலி சபதமாக உருவெடுத்துள்ளது.
பாஞ்சாலியின் கதையைப் படித்த பண்டிதர்கள் மட்டுமன்றிப் பாமரனும் உணர்ந்து கொள்ளும் வகையில் பாரதி இக்காப்பியத்தை நொண்டிச் சிந்திலும், நாடோடிகள் பாடிவந்த ராகங்களிலும் இணைத்துப் பாடியுள்ளார்.







Reviews
There are no reviews yet.