Description
வாய்விட்டுச் சிரிக்கும் அளவில் நகைச்சுவையோடும் அந்தச் சிரிப்பு நமக்குள் அடங்கும் முன்னரே மெல்லிய துயரம் நம் மனத்தில் படரும் விதத்திலும் கதைகளைப் படைக்கிறார். பிறநாட்டுப் பண்பாடுகளையும் நாகரிகத்தையும் நம் கண்முன் கொண்டு வருவதும் துளிக் காட்சிகளின் வழியாக உண்மை வாழ்வியலை நமது மனத்தில்
கோட்டோவியமாக வரைந்து செல்வதும் இவருடைய எழுத்தின் தனித் தன்மைகள். பிறர் அறியாத அரிய தகவல் களைக் கதையோட்டத்தோடு கலந்து, எல்லோரும் ரசித்து, வியந்து பாராட்டும் வகையில் கதைகளை உருவாக்கி வருகிறார். அ.முத்துலிங்கம், தமிழ்க் கதையுலகின் ‘முத்து’; தமிழ் இலக்கிய உலகின் சொத்து.
Reviews
There are no reviews yet.