Description

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa, 24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 முதல் 2016 வரையும் 2016 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.

அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “புரட்சித் தலைவி ஜெயலலிதா PURATCHI THALAIVI JAYALALITHA”