Description
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் ‘டார்மெரி’ என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், ‘ஜாக்கஸ் தி ஆர்க்’ மற்றும் இவரது தாயாரின் பெயர், ‘இசபெல்’. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும்.
இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
Reviews
There are no reviews yet.