Description
மனிதனின் அடிப்படைத் தேவைகளை உணவு, உடை, இருப்பிடம் என்று முறைப்படுத்திக் கூறுவர். இவற்றுள் முதன்மையானதாக விளங்கும் உணவு பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றது இந்நூல். இன்றைய நவீன உலகில் துரித உணவு ஒருபுறமும், உணவகத்தில் உண்ணும் வழக்கம் மறுபுறமும் வளர்ந்து வரும் நிலையில், எந்த உணவு நமக்குப் பொருந்தக்கூடிய உணவு, எவையெல்லாம் பொருந்தாத உணவு என்பதை 1921ஆம் ஆண்டிலேயே எழுதி வெளியிட்டவர் மறைமலை அடிகளார். இவர் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர். தமிழ் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். தூய தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவர் இந்நூலில் நம் உடலுக்குப் பொருந்தக்கூடிய உணவுகளைப் பற்றியும், உடலுக்குப் பொருந்தாத தீமை விளைவிக்கும் உணவுகளைப் பற்றியும் அறிவியல் சார்ந்த கருத்துகளோடும் சமயம் சார்ந்த கருத்துகளோடும் விரிவாக இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.







Reviews
There are no reviews yet.