Description

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.

ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.

1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்யசோதாக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.