Description
நாராயணகுரு (ஆகஸ்ட் 20, 1856 – செப்டம்பர் 20, 1928), இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்
Reviews
There are no reviews yet.