Description
சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை. தர்மத்துக்கு என்றும் அழிவில்லை. கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தருமமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை.
மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம்.தமிழில் இந்த காவியத்தைப் பாடியவரும் ஐவர்: காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர்; எனவே இருவகையாலும் “ஐவர் காவியம் ” என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாகவே விளங்குகிறது மகாபாரதம்.
நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது ! நம்பாததில் எதுவும் இல்லை !
நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது ! அதை நாமும் நம்புவோம் : நம்பி வாழ்வோம்.