Description
மகா வம்சம் (வரலாற்று நாவல்)
இலங்கை இராவணன் ஆண்ட காலத்தில் எத்தனை சிறப்பாக இருந்தது என்பதை இராமாயணத்தில் பார்க்க முடிகிறது. இராவணனுக்குப் பின்னால் இலங்கையின் நிலை என்ன என்பதற்கு எந்த நூலும் இல்லை. மகான் புத்தர் நிர்வாணம் எய்திய கொஞ்ச காலத்திற்குப் பிறகு தான் இலங்கையின் மிதான ஒளி விழுகிறது வாங்க நாட்டிலிருந்து விஜயன் என்னும் அரசகுமாரன் நாகதீபம் என்னும் இலங்கையை அடைந்து ராஜவம்சத்தை உருவாக்கினான் என்ற தகவல் தான் நமக்கு இலங்கையின் வரலாற்றை துவக்கமாக அறிவிக்கிறது. இது கி.மு. ஐந்தாவது நூற்றாண்டாக இருக்கலாம்.
மகாவம்சத்தை இலங்கையில் விஜயன் துவக்கி, அவனுக்குப் பிறகு அவனது வாரிசுகள் அந்த நாட்டை அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கு ஆண்டு வந்திருக்கிறார்கள். வட பாரதத்திலான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவங்குகிறான். இவ்வாறு வட இந்திய மன்னனுக்கும் தென் இந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு இலங்கையை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. புராணக்கதையிலிருந்து மாறுபட்டு நம்பத் தகுந்த வரலாற்றுக் கதையாக மாற்றி அமைத்திருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.