Description
தமிழ் மொழியில் அமைந்துள்ள மனோன்மணியம் என்னும் கவிதை நாடக நூலுக்கு இணையாக எந்நூலும் இல்லை எனலாம். கவிதை நயமும், காப்பியச் சிறப்பும், தொடை நயமும், கருத்து வளமும், ஓசை இனிமையும், செந்தமிழ் இலக்கிய வளமும் ஒருங்கே இணைந்து அணிசெய்யும் அழகு நிறைந்த நாடகக் காப்பியம். நாடக அமைப்பில் மேனாட்டு முறையினைப் பின்பற்றியது எனினும் செந்தமிழ் இன்பம் ஊறும் செஞ்சொல் காப்பியம்.
அது படிப்பதற்குரிய பைந்தமிழ் நடையது. உரையாடற்குரிய எளிய அழகு உடையது. அது பலரும் படித்துப் பாராட்டும்
பண்புடையது; சுவைத்துப் பாராட்டும் செறிவுடையது. பாத்திர உளவியல் அறிந்த பாங்கில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் புலமைத் திறமும், இலக்கிய வளமையும், உழைப்பின் உயர்வும் இந்நூலில் ஒருங்கே காணப்படும் உயர்வுகளாகும்.
மாணவர்கள் தேர்வுக்கு விடைகாணும் நோக்கிலும், தொகுத்துரைக்கும் பாங்கிலும், திறனாய்வுப் போக்கிலும் இந்நூல்
அமைந்துள்ளது. மாணவர் முதல் தமிழறிஞர் அனைவரும் போற்றும் வகையில் வினா – விடை நோக்கில் அமைந்துள்ளது. ‘மனோன் மணீயம்’ என்ற பெயரை தமிழ் ஒலி அமைப்புக்கு ஏற்ப ‘மனோன் மணியம்’ என்று பயன்படுத்தி இருப்பதாக நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார்.







Reviews
There are no reviews yet.