Description
இம்மான்மியம் திருவனந்தபுரத்திலிருந்து முன் பிரசுரிக் கப்பட்டு வந்த ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் 1917-ஆம் வரு ஷம் மார்ச்சு மாதம் தொடங்கிப் பகுதி பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. 1918 பெப்ருவரியோடு முற்றுப்பெற்றது. அக்காலத்தில் அப்பத்திரிக்கையின் ஆசிரியராயிருந்தவர்கள் பண்டித எÞ.முத்துசாமிப் பிள்ளையவர்களும், திருவனந்த புரம், மஹாராஜா கல்லூரி மலையாளப் பேராசிரியர் சி.என்.ஏ. அனந்தராமைய சாÞதிரிகளும் ஆவார்கள்.

பத்திரிகையில் ஆசிரியர் பெயரோடு மான்மியம் வெளிவரவில்லை. பழைய ஏட்டுச்சுவடியில் இருந்த நூலை அச்சிற் பதிப்பிக்கிற பாவனையிலே வெளியாகிக் கொண்டிருந்தது. ஆசிரியர் பெயர் காணப் பெறாவிட்டாலும், பழைய நூல் என்ற தோற்றத்தோடு பிரசுரமாகிய போதிலும், இத்தோற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு நூலிற் சிற்சில வரிகளும் சொற்களும்
பொடிந்து போயின என்று குறிப்பிட்டிருந்த போதிலும் எழுதியவர்கள் இன்னார்தா மென்பது பலருக்குத் தெரிந்த இரகசியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பகுதியும் வெளிவர, வெளிவர தமிழ் மக்கள் அதனை ஆவலாய் வாங்கிப் படித்து வந்தார்கள். இலக்கியச் சுவையிலே ஈடுபட்ட ஸ்ரீ.கே.ஜி. சேஷையர் முதலானவர்கள் இந்நூலின் பெருமை யைப் பலரும் அறியச் செய்து வந்தார்கள். நாஞ்சினாட்டு வேளாள இளைஞர்கள் இதனை வாசித்து உள்ளங் கொதித்தார்கள். அவர்களில் முதியோர்கள் இதனை வாசித்த அளவில் இதிலே பொதிந்து கிடக்கும் உண்மையையும் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்ந் தார்கள். அந்நாட்டு ஆண்களும் பெண்களும் நூலிலுள்ள நகைச்சுவையில் ஈடுபட்டு உள்ளத்தாற் சிரித்து மகிழ்ந்தார்கள். தமிழிலே ஒரு நூதன இலக்கியம் தோன்றிவிட்டது. மான்மியம் ஒரு சமுதாயத்தில் சீர்திருத்தத்தை விளைத்தது.அப்படியே தமிழ் நடையிலும் கவிஞர் சமுதாயத்திலும் சீர்திருத்தத்தை இது விளைவிக்க வல்லது என்பதைத் தமிழ் அறிஞர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Reviews
There are no reviews yet.