Description

மாசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III of Macedon; ) என்பவர் பண்டைக் கிரேக்க இராச்சியமான மாசிடோனின் மன்னன் ஆவார். இவர் பொதுவாக மகா அலெக்சாந்தர் என்று அறியப்படுகிறார். இவர் தனது தந்தை இரண்டாம் பிலிப்புக்குப் பிறகு, கி. மு. 336ஆம் ஆண்டில், தன் 20ஆம் வயதில் அரியணைக்கு வந்தார். தன்னுடைய பெரும்பாலான ஆட்சிக் காலத்தை மேற்கு ஆசியா மற்றும்  எகிப்து முழுவதும் நடத்திய ஒரு நீண்ட இராணுவப் படையெடுப்பில் செலவழித்தார். தன் 30ஆம் வயதில் வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார். இப்பேரரசு கிரேக்கம் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தது. இவர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதே கிடையாது. வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் மிக வெற்றிகரமான இராணுவத் தளபதிகளில் ஒருவராக, பரவலாகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.