Description

வரலாற்று நாவல்

களப்பிரர்கள் தமிழ் மண்ணில் கி.பி. 300 முதல் கி. பி. 600 வரை ஆட்சி செய்தனர். அவர்கள் தமிழின் தொன்மையும், அதன் சிறப்பையும் அறிந்து தமிழ் மீது ஆர்வங்கொண்டு தமிழைக் கற்றனர். களப்பிரர் காலத்தில் வாழ்ந்த சமணத் துறவி வஜ்ரநந்தி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட சங்கம் தமிழையும் சமூகச் சேவைகளையும் மருத்துவ நூல்களையும் படைத்தனர்.

களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று கூறியதை அக்காலம் இருண்ட காலம் அல்ல என்பதையும் ஒளி மிகுந்த காலம் என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் சான்று காட்டியுள்ளனர். இதனை ஆதாரமாகக் கொண்டு,

மாவீரன் பாண்டியன் கடுங்கோனை கதையின் நாயகனாக்கி அவன் வீரதீர சாகசங்களால் தமிழ் மண்ணையும், பாண்டிய நாட்டையும் சமணத் துறவிகளிடமிருந்தும் களப்பிரர்களிடமிருந்தும் மீட்ட வரலாற்றை சரித்திர புதினமாக ஆக்கியுள்ளேன்.

Additional information

Weight 0.556 kg
Author

Book Type

Paperback

Publication

SEETHAI PATHIPPAGAM

ISBN

978-93-89707-49-6