Description
வட மொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்தூராரும் அவற்றை வெறும் மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றை தம் கவிதையர்ற்றலால் சுவைபடத் தந்துள்ளார். அதனால் இப்படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ்கின்றன.
வில்லி பாரதம் இக்கதையினை ” மாபாரதம் ” என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. கதையின் கரு பாஞ்சாலியின் சபதம்: எனினும் அது உணர்த்தும் நீதி ‘போர் என்பது அழிவை உண்டாக்கும்: அது தவிர்க்க வேண்டியது மானுட நெறி ‘ என்றும் காட்டுகிறது.
கீதை உபநிடத்தின் சாரம் : அது இடம் பெற்றிருப்பது பாரதத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
இதனை உரைநடையாக எழுதும் பொது ஓர் அறிய சாதனையைச் செய்ய வேண்டும் என்று முயன்றேன்.