Description
கொண்ட அதிகாரங்களுக்கேற்ப மும் முதற்பொருளும் இந்நூலில் விரவி உரைத்திருக்கின்றன. இன்பப் பகுதிக்குரிய முதுமொழிகள் மிகச் சிலவே. அவையும் இன்பச்சுவையை விளக்குவனவல்ல. கார் நாற்பதும் ஐந்திணையும் முப்பாலும் (இன்னிலையும்) ஒழிந்த ஏனைக் கீழ்க்கணக்கெல்லாம் அறம்பொருளின்பங்களை இங்ஙனம் உரைப்பனவே. திருக்குறளிற்
கூறிய சில பொருள்களை அம்மொழிகளையே பின்பற்றிக் கூறுதலின், இந்நூல் திருக்குறளுக்குப்பின் இயற்றியதென்பது துணிதலாகும். இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார் என்பவர். பழைய ஆண்றோர்கள், “புலத்துறை முற்றிய கூடலூர்
கிழார்” என இவரைச் சிறப்பித்துக் கூறுவர்.







Reviews
There are no reviews yet.