Description
மறுமலர்ச்சித் தமிழின் மாபெருங்கவிஞரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் படைத்திருக்கும் முத்தமிழ் படைப்புகளும் மூவாத் தமிழுக்குக் கட்டியம் கூறுகின்றன. 1948 இல் அவரால் எழுதப்பட்டதே முல்லைக்காடு. முல்லை மலரின் இதழ்களைப் போல இயற்கைப்பகுதி, தமிழகப்பகுதி, காதற்பகுதி, நகைச்சுவைப் பகுதி, சிறுவர் பகுதி என ஐந்து குறுந்தலைப்புகளைக் கொண்டுள்ளது. முல்லையின் மணம்போல இக்கவிதைகளின் மணம் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே ஈர்க்கின்றது. இயலும் இசையும் கலந்து இனிமையை இரட்டிப்பாக்குகின்றன. எந்தச் சோகத்தையும் சுவையாக மாற்றும் இயல்பு கவிஞர்க்குண்டு என்பதைப்போல இயல்பாகவே நகைச்சுவை உணர்வினை உடையவர் எழுதிய நகைச்சுவைப்பகுதியும் இடம் பெற்றிருப்பது, முல்லைக்காட்டில் அமைந்த தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்த காதல் உணர்வின் இன்பமும் துன்பமும் இழையோட வாழ்ந்த வாழ்வின் பயனாக விளைந்த சிறுவர் வளர்ப்பில் சீரிய நடை போடுகிறது.








Reviews
There are no reviews yet.