Description
“மௌனவெளி” யைத் தலைப்பாகக் கொண்ட இந்தக் கவிதை நூலை கவிஞர். டாக்டர் சை.ரஃபீக் பாஷா படைத்திருக்கிறார்.
இவர் எனது கடந்து முப்பது வருடங்களைக் கடந்தும் என்னுடைய நண்பர், தோழர், ஆசான் ஆகிய பல பரிணாமம் அடைந்து என் தோளோடு சேர்ந்து நடந்து வருகிறார். சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தொடங்கி, செய்தி ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற நிலைகைக் கடந்து நிலைய இயக்குநர் ஆக உச்சத்தைத் தொட்ட சாதனையாளர்.
எளிமையானவர், நேர்மையாளர், வாழ்வில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளா கண்டிப்பானவர். இவர் தொலைக்காட்சிக்காக குறும்படமாய்த் தயாரித்த “அகரம்” அனைவராலும் பாராட்டப்பட்டது. தேசிய விருது பெற்றது. அது பெரிய பிரம்மாண்டம் இல்லாத முதல் எந்திரன்.
– கவிஞர் காதல் மதி
Reviews
There are no reviews yet.