Description

இராசாராம் மோகன்ராய் (Raja Ram Mohan Roy, மே 22, 1772 – செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

இவர் கற்றறிந்தமொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட, இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். கி.பி. 1815 இல் கல்கத்தாவில், ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 இல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார். பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 இல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.

அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.